சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள், நடிகைள் நடிப்பின் மீது ஆர்வம் இருந்த காரணத்தால் ஆரம்ப காலத்தில் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தான் முன்னணி பிரபலங்களாக வளர்ந்து இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் எல்லாம் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் திறமைகளை வைத்துக்கொண்டு திணறி கஷ்ட்டப்பட்டு சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள்.
அவர்களை போலவே, மக்கள் பலரும் நடிப்பு திறமைகளை வைத்துக்கொண்டு பட வாய்ப்புகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா அதன் மூலம் நம்மளுடைய திறமையை வெளிக்காட்டலாம் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறது
முதல் முத்தத்திற்கு 10 மார்க்! அதுதான் அடுத்த கிஸ்-க்கு உதவுச்சு..நடிகை ரேஷ்மா ஓபன் டாக்!.
அது என்னவென்றால், தங்களுடைய தயாரிப்பில் உருவாகும் புது படத்தில் மதுரையில் இருப்பவர்களில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், என நேர்முக தேர்வுக்கு வந்து கலந்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் 2டி நிறுவனத்தின் 20-வது திரைப்படமாக உருவாகிறது.
சூர்யா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க உங்களுக்கு ஆர்வம் மற்றும் நீங்கள் மதுரையில் உள்ளவர்கள் என்றால் ‘அமோகா சர்வீஸ் அபார்ட்மெண்ட், SS காலனி, பாலாஜி கேஸ் ஏஜென்ஸி அருகில், மதுரை – 16 இடத்திற்கு செல்லலலாம். அங்கு தான் வரும் நவம்பர் 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெறவிருக்கிறது.
இதில் கலந்து கொள்ள இளைஞர்களுக்கு (18 வயது முதல் 28) வயது வரை இருக்கலாம். பெரியவர்கள் (30 வயது முதல் 70) வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த திரைப்படம் படத்தை எந்த இயக்குனர் இயக்கிறார் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…