உலகம் முழுவதும் 38 மொழிகளில்…தமிழ் சினிமாவை மாற்ற போகும்’கங்குவா’ திரைப்படம்!
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அவ்வப்போது, இப்படம் பற்றிய புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில், இந்த திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிசித்துள்ளார். கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் வெளியிடப்பவுள்ளது. அதாவது, முன்னதாக இந்த திரைப்படம் 10 மொழிகளில் மட்டுமே ரிலீஸாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்பொது உலக முழுதும் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ்களில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல், ” இதுவரை தமிழ் சினிமாவில் ரிலீசான படங்களை விட, அதிகமா ரிலீஸ் செய்து புதிய சாதனை படைக்கும், நினைத்த படி எல்லாம் சாரியாக நடந்தால் இந்த திரைப்படம் பயங்கர ரீச் ஆகுது மட்டுமில்லாமல், பெரிய சாதனை படைக்க காத்திருக்கிறது என்று கூறிஉள்ளார்.
பிக் பாஸ் பிரதீப் பெயரில் பண மோசடி? பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் – பிரதீப் ஆண்டனி வேண்டுகோள்
இதை வைத்து பார்க்கையில், இந்த திரைப்படம் நடிகர் சூரியாவின் கேரியரில் மிகப்பெரிய ரிலீஸாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், கடைசியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த நடிகர் சூர்யா, விக்ரம் மற்றும் ராகெட்ரி ஆகிய படங்களில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சூர்யாவுக்கும் அவரது ரசிகர்குக்கும் மிகப்பெரிய ரிலீஸாக அமைய உள்ளது.
சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!
முன்னதாக, இந்தப்படத்தில் பணியாற்றி வரும் மதன் கார்க்கி சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, “இந்த படத்தில் வரும் பீரியட் போர்ஷன் ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது. இதற்காக புதிதாக நிலம், மாந்தர்கள், வட்டார வழக்கு என பல விஷயங்களை செய்துள்ளோம். அனைத்தையும் விட புதிதாக ஒரு கடவுளையும் உருவாக்கி உள்ளோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.