‘ஆரம்பிக்கலாமா’! கங்குவா படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சூர்யா!

kanguva

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, பி.எஸ். அவினாஷ், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு, ரவி ராகவேந்திரா, கே.எஸ். ரவிக்குமார், ஆராஷ் ஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், கங்குவா படத்தின் அப்டேட் எதாவது வெளியாகுமா? என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்காகவே ஒரு அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக தொடங்கப்பட்ட, உலகத்தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவில் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

லால் சலாம் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் புதிதாக அத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோஸ் என்று டப்பிங் ஸ்டுடியோவை தொடங்கி இருக்கிறது. இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதால் முதன் முதலாக கங்குவா படத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ள காரணத்தால் விரைவாக படத்தின் சிஜி வேலைகளும் முடிந்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்கள் எல்லாம் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில், விரைவில் முதல் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்