ஜெய் பீம் அதிகாரத்தை நோக்கிய கேள்வி.! அதனை ‘பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம்.! – சூர்யாவின் ‘நச்’ பதில்.!

Default Image

மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் படம் குறித்து சூர்யாவிற்கு கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விகளுக்கு சூர்யா பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் அண்மையில் அமேசான் OTT தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. அதில், இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வியலையும். அதிகாரத்தில் உள்ளவர்களால் அவர்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் உண்மைக்கதையை மையப்படுத்தி படமாக்கப்பட்டிருந்தது.

அதில், வரும் ஒரு காவல்துறை அதிகாரி பெயர் மற்றும் அவர் வரும் ஒரு காட்சியின் பின் புறத்தில் குறிப்பிட்ட வகுப்பினரின் அடையாளம் இருப்பதாக கூறி மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், ஒரு குறிப்பிட்ட சாதி இனத்திற்கு எதிராக படத்தின் கதைக்கரு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யா தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். அதில், ‘ ஒரு திரைப்படம் ஆவணப்படம் அல்ல. திரைப்படத்தின் கதையானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் யாரையும் குறிப்பிடுவன அல்ல. என முன் படத்தின் தொடக்கத்திலேயே அறிவித்து விட்டோம்.

படத்தின் கதைக்களமானது அதிகாரத்தை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள். அதனை குறிப்பிட்ட ‘பெயர் அரசியலாக்க’ வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒருவரை குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்த கதாபாத்திரத்தின் பெயர், வேறு ஒருவரை குறிப்பதாக ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிடுகிறார். ஒரு கதாபாத்திரத்திற்கு எந்த பெயர் வைத்தாலும் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடுவதாக கருதப்படுமேனால்,

அதற்கு முடிவே இல்லை. அனைவரும் அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல் ‘பெயர் அரசியலால்’ மடை மாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது. ‘ என தனது பாணியில் மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு சூர்யா பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்