துல்கர் சல்மான், காஜல், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ள ஹே சினாமிகா எனும் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாத்துறையில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலம். தமிழில் இவர் நடித்த வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் ரசிக்கப்படுகிறது.
கடைசியாக பான் இந்தியா திரைப்படமாக வெளியான குரூப் படமும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தை அடுத்து, மீண்டும் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடன இயக்குனர் பிருந்தா இந்த படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
ஹே சினாமிகா என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி என இருவர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். காஜல் அகர்வால் கடந்த வருடம் கெளதம் கிச்சலு எனும் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு அவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.
ஹே சினாமிகா படத்தின் போஸ்டரை நடிகர் சூர்யா, நாகார்ஜுனா, ராணா டகுபதி, நஸ்ரியா என முக்கிய பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாக உள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…