அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சூர்யாவின் 44-வது திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

suriya 44 vs Good Bad Ugly

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட நினைக்கும் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னதாகவே, தங்களுடைய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள்.

அப்படி தான், அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் படமாக  அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என ஏற்கனவே, அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் காரணமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை அந்த தேதியில் ரிலீஸ் செய்யவேண்டாம் என யோசித்து வருகிறார்கள். ஏனென்றால், அஜித் படம் என்றாலே ஓப்பனிங் அந்த அளவுக்கு வசூல் கிடைக்கும்.

இந்த சூழலில், நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தன்னுடைய 44-வது படத்தினை பொங்கல் 2025 பண்டிகையை முன்னிட்டு வெளியீட படத்தின் தயாரிப்பு நிறுவனமும் , சூர்யாவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இருப்பினும், நம்மப்ப தக்க சினிமா வட்டாரத்தில், இருந்து கிடைத்த தகவலின் படி இந்த தகவல் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. விரைவில் படத்தின் தலைப்புடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பக்கம் இந்த தகவல் பரவி கொண்டு இருக்கும் சூழலில், மற்றொரு பக்கம் ஏற்கனவே, சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் வேட்டையன் படம் வெளியாகிறது என்ற காரணத்தால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்படுவதாக சூர்யாவே அறிவித்திருந்தார். எனவே, இந்த சூழலில் அவர் எப்படி அஜித் படத்துடன் தன்னுடைய படத்தை இயக்குவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்