ஜெய் பீம் சர்ச்சைகள்.! போதும்டா சாமி என துபாய்க்கு செல்ல முடிவெடுத்த சூர்யா.!?

Published by
மணிகண்டன்

ஜெய் பீம் திரைப்பட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்பதால், சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப சூர்யா முடிவு எடுத்ததாக தெரிகிறது.

சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் எந்தளவுக்கு ஆதரவை சம்பாரித்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்திடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதற்கு இரு தரப்பில் இருந்தும் அறிக்கைகளும் வெளியாகி கொண்டு இருந்தன. மேலும், அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அதன் காரணமாக அசம்பாவிதங்கள் நடந்துவிட கூடாது என சூர்யா வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு நிற்கின்றனர்.

இதன் காரணமாக நடிகர் சூர்யா மன உளைச்சலில் இருக்கிறாராம். இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாலும் சர்ச்சை தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், சற்று இதிலிருந்து விலகி இருக்க சூர்யா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

அதனால், விரைவில், குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக அவர் துபாய் நாட்டிற்கு செல்வார் என கூறப்படுகிறது. வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் நிற்பதால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் சூர்யா என தெரிகிறது.

இந்த சர்ச்சைகள் கொஞ்சம் தணிந்த பின்னர் மீண்டும் இந்தியா வர சூர்யா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

33 minutes ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

43 minutes ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

1 hour ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

2 hours ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

3 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

3 hours ago