ஜெய்பீம் படத்தை தொடர்ந்து அடுத்த உண்மை சம்பவத்தில் சூர்யா!

Jai Bhim

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து பாராட்டுக்களை குவித்தார். இந்த திரைப்படம் பல விருதுகளை குவித்தது. இந்த நிலையில், கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தை போன்ற மற்றொரு உண்மை சம்பவ கதையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் ’12th FAIL’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சூர்யாவின் 2D நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாலிவுட் திரைப்பட ரீமேக்கில் தான் சூர்யா நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சூர்யா நடிக்கிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஒரு வேலை நடித்தால் அது சிறப்பு தோற்றமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

12th FAIL

இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் ’12th FAIL’ திரைப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மேதா சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.1.1 கோடி வசூல் செய்து, இதுவரை மொத்தமாக ரூ.35 கோடிகளை தாண்டியுள்ளது.

கங்குவா

இதற்கிடையில், நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

தயாரிப்பாளர் தலையில் குண்டை போட்ட ஜப்பான்! இத்தனை கோடி நஷ்டமா?

சூர்யா 43

கங்குவா படத்தை தொடர்ந்து, சூர்யாவின் 43-வது திரைப்படத்தை சூரரைப்போற்று படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்குகிறார். திரைப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த 43-வது திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா, நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்