நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலா – சூர்யா கூட்டணி வணங்கான் படத்தின் மூலம் இணைந்தனர். இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த சமயத்தில் ஒரு அப்டேட் கூட வெளியாகாததால் படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவியது.
ஆனால், இயக்குனர் பாலா ஒரு விழாவில் வணங்கான் படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இயக்குனர் பாலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் ” வணங்கான் படத்தின் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி “வணங்கான்” படப்பணிகள் தொடரும்…” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி நிறுவனமும் இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…