எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம்.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் நேற்று இனிதே நிறைவு பெற்றது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், அடுத்தடுத்த அப்டேட்கள் வரிசைகட்டி வரும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இப்படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம். லைட் மேன் முதல் மூத்த டெக்னீஷியன்கள் வரை அனைவருக்கும் இந்த பரிசு கிடைத்துள்ளதாம். இந்த தகவல் தற்போது சினிமாவாசிகள் மூலமாக வெளியே வந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவலோ அல்லது புகைப்படங்களோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், வினய், சூரி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த வருட கிருஸ்துமஸ் விடுமுறை அல்லது அடுத்தவருட பொங்கல் விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…