சர்கார் படத்துக்கு நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட தியேட்டர்களின் வசூல் விவரங்களை ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மதுரை சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த மனுவில் அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் மல்டி பிளக்ஸ் திரையரங்கில் வசூலிப்பதாக தெரிவித்தார்.இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை,மதுரையில் சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் .மேலும் சர்கார் படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 26 ஆம் தேதி ) மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…