துணை நடிகர் பிரபு காலமானார்.! கொள்ளி வைத்து தகனம் செய்தார் டி.இமான்..!
யாருமற்ற நிலையில் இருந்த துணை நடிகர் பிரபு உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு தீ வைத்து இறுதிச்சடங்குகளை செய்தார் பிரபல இசை அமைப்பாளர் இமான்.
தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணமடைந்தார். இவர், நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே, அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.
இந்நிலையில், இன்று பிரபு உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடலை இசையமைப்பாளர் இமானே தகனம் செய்தார். டி.இமானின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.