துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் காலமானார்.!
தமிழில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் சென்னையில் காலமானார்.
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என பல படங்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயசீலன். 40 வயதான அவர் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மஞ்சள்காமாலை தீவிரமடைந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ஜெயசீலனின் திடீர் மறைவுக்கு சிகர்கள் மாற்றம் பிரபலங்கள் பலரும் ஜெயசீலனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஜெயசீலன் காலமானார்.