Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழு மீண்டும் தொடங்கினர். இதுவரை இந்த படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், இப்பொழுது படக்குழு மும்பையில் படமாக்கி வருகிறது.
Vettaiyan – rajini [file image]இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் வேட்டையன் படத்தின் படபிடிப்பில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் இரு பெரும் சூப்பர் ஸ்டார்களும் கோட் சூட்டில் சும்மா மாஸாக காட்சி அளிக்கின்றனர்.
Vettaiyan – rajini [file image]வேட்டையன் திரைப்படம் அமிதாப்பின் தமிழ் அறிமுகத்தை குறிக்கிறது. ஆம், ஹம் திரைப்படத்திற்குப் பிறகு 33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் வேட்டையான் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vettaiyan – rajini [file image]இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.