தமிழ் சினிமாவின் முதல் 15கோடியிலிருந்து முதல் 250 கோடி வரை! சூப்பர் ஓன் மாஸ் கலெக்ஷ்ன்ஸ்!!!
தமிழ் சினிமாவில் தற்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. வியாபாரமும் பெருகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை பொருத்து வெற்றி தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் செய்யும் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. முதல் 3,4 நாட்களிலேயே படத்தின் பட்ஜெட் வசூல்லாகி விடுகிறது. அதன் பின்னர் ஓடுவது லாபமாகி விடுகிறது. ஒரு வாரம் வெற்றிகரமாக ஓடினாலே வெற்றி படமாகிறது.
அந்த வரிசையில் 90’கள் முதல் 2019 வரை எந்தெந்த படங்கள் அதிக வசூல் என பார்த்தால் அதில் அதிகம் இடம்பெறுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படங்களும்தான்.
இதில் தமிழ் சினிமாவில் முதல் 15 கோடி வசூல் செய்தது அண்ணாமலை. முதல் 25 கோடி பாட்ஷா, 30 கோடி இந்தியன், 40 கோடி படையப்பா, 50 கோடி சந்திரமுகி, முதல் 100 கோடி சிவாஜி, 150 கோடி எந்திரன், 200 கோடி கபாலி, 250 கோடி 2.O . இவை அனைத்தும் ஒரு மொழி (தமிழ் பதிப்பு) வசூலின் தோராய மதீப்பீடு மட்டுமே.
DINASUVADU