தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள திரைப்படங்களில் ஒன்று மாமனிதன். சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி நடித்துள்ளனர். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவிருந்தது. சில காரணங்களால் வெளியாகம் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன் பின் இறுதியாக இந்த படம் வரும் மே மாதம் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இந்த படத்தை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் பார்த்து விட்டு நெகிழ்ந்து பாராட்டியுள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “ஜனவரியில் மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள் நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…