விரைவில் சூப்பர் ஸ்டார் – தளபதி விஜய் சந்திப்பு! அருகருகே நடக்கும் அந்த தருணம்…
லியோ திருப்படம் வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுயடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், ஜெயிலர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதில், விஜய் நடித்துவரும் தளபதி 68 படத்தின் தாய்லாந்து படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
தற்போது, அங்கே தான் ரஜினியின் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், ரஜினி, விஜய் அருகருகே நடிக்கவுள்ளதால், இருவரும் சந்திக்க கூடிய தருணம் நடைபெறும் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் இவர்கள் இருவரும் கடந்த காலத்தில் சந்தித்து கொண்டது இல்லை.
சினிமாவில் தற்போது உச்சில் இருக்கும் விஜய் மற்றும் ரஜிகாந்த் இருவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பட்டத்திற்காக சண்டை போடுவது வழக்கம். சமீபத்தில் கூட, இருவரும் கடைசியாக நடித்த திரைப்படத்தின் விழாவில் பேசிய காக்கா – கழுகு கதை சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் மரியாதை நிமர்த்தமாக சந்தித்தால் மிகப்பெரிய தருணமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காக்கா-கழுகு கதையால் யாருக்கும் பயனில்லை.! லெஜண்ட் செய்த சம்பவத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…
தலைவர் 170
இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
தளபதி 68
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுயடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.