Superstar Rajinikanth [file image]
இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 170’ திரைப்படம் பற்றிய அப்டேட்கள் கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வார தொடக்க நாளில் இருந்து நடிகர்கள் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
தற்போது, படக்குழு படத்தின் முதல் ஷெட்யூலுக்காக கேரளாவுக்கு சென்றுள்ளது. இப்பொது, திருவனந்தபுரத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு கேரளாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், இப்பொது ரஜினியின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது. ஆரஞ்சு நிற சட்டையில் சூப்பர் ஸ்டார் புதிய லுக்கில் தொப்பி அணிந்து கொண்டு கார் மீது ஏறி நின்று கொண்டு ரசிகர்களுக்கு வணக்கம் வைத்துள்ளர்.
உண்மை சம்பவத்தை மயமாக வைத்து எடுக்கப்படும் ‘தலைவர் 170’ படத்தில் அமிதாப் பச்சன் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்துள்ளார்கள். மேலும், இந்த படத்தில் பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…