Thalaivar170: இது தான் சூப்பர் ஸ்டார் அலப்பற…புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்!!

Superstar Rajinikanth

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 170’ திரைப்படம் பற்றிய அப்டேட்கள் கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வார தொடக்க நாளில் இருந்து நடிகர்கள் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தற்போது, படக்குழு படத்தின் முதல் ஷெட்யூலுக்காக கேரளாவுக்கு சென்றுள்ளது. இப்பொது, திருவனந்தபுரத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு கேரளாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், இப்பொது ரஜினியின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது. ஆரஞ்சு நிற சட்டையில்  சூப்பர் ஸ்டார் புதிய லுக்கில் தொப்பி அணிந்து கொண்டு கார் மீது ஏறி நின்று கொண்டு ரசிகர்களுக்கு வணக்கம் வைத்துள்ளர்.

உண்மை சம்பவத்தை மயமாக வைத்து எடுக்கப்படும் ‘தலைவர் 170’ படத்தில் அமிதாப் பச்சன் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்துள்ளார்கள். மேலும், இந்த படத்தில் பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்