சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் கதை கசிந்தது! அதிர்ச்சியில் படக்குழுவினர் !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானாது. இதனையடுத்து, இப்படத்தில் நடிக்கும் இந்தி நடிகரான திலீப் தாகீர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அப்பேட்டியின் போது, தர்பார் படத்தில் ரஜினி மும்பையை சுத்தம் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தெரிவித்துளளார். இவரது இந்த பேட்டி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.