அண்ணாமலையாரை வழிபட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!
‘லால் சலாம்’ படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
‘லால் சலாம்’ படத்தில் நடிப்பதற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை-வேலுார் சாலையில், சத்திரம் பகுதியிலுள்ள பண்ணை வீடு ஒன்றில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
#Rajinikanth | ரஜினிகாந்த் இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். pic.twitter.com/v6mRA82Lmb
— Senthilraja R (@SenthilraajaR) July 1, 2023
இந்நிலையில், ரஜினியை பார்க்க ரசிகர்கள் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக அவருடைய மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, திருவண்ணாமலையில் ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
லால்சலாம் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.