தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார்.
அந்த வகையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” படத்தை பார்த்து விட்டு பார்த்திபனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அத்துடன் ஒரு லேட்டரையும், எழுதியுள்ளார்.
அதில் ” இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழுபடத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுகளையும்,
பெற்று, உலக சாதனை படைத்திருக்கும். நண்பர் பார்த்தியன் அவர்களுக்கும் ..அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ. ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் .. முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்” என நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.
இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…