ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171 -வது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
அவ்வப்போது, தலைவர் 171 படம் குறித்த தகவல் இணையத்தில் உலா வருவது வழக்கம். அந்தவகையில், தற்பொழுது இந்த படத்தில் ரஜிகாந்த் கேங்ஸ்டர் அவதாரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பாஷா, பில்லா, காலா, கபாலி போன்ற படங்களில் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.
ரஜினி கடைசியாக ஜெயிலர் படத்தில் ஜெய்லராக நடித்திருந்தார், இப்பொது வேட்டையன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால், தலைவர் 171 படத்தில் அவர் மீண்டும் பழைய பணியான கேங்ஸ்டர் அவதாரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் இந்த கதாபாத்திரத்தை பல மடங்கு மெருகேற்றி ரசிகர்களாய் வியக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த தப்ப மட்டும் பண்ணவே கூடாது! தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் எடுத்த முடிவு?
மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், ஒரு தகவலின்படி, படத்தில் ரஜினிக்கு மகனாகவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தலைவர் 171 படத்தில் ராகவலரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…