சித்தார்த்துக்கு கால் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்கும் படங்களை தாண்டி மற்ற படங்களையும் பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்தோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பாராட்டுவது வழக்கமான ஒன்று. அதைப்போல படங்கள் வெளியாகும் முன்பே அதற்கான விமர்சனங்களை பார்த்துவிட்டு அந்த படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிடுவார். குறிப்பாக கடைசியாக பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில், அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருன் குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான “சித்தா” திரைப்படத்தை பார்க்க போவதாகவும், அந்த படத்தின் விமர்சனத்தை கேட்டேன் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் என சித்தார்த்துக்கு கால் செய்து ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளாராம்.
இதனை நெகிழ்ச்சியாக நடிகர் சித்தார்த்தே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு இந்த திரைப்படத்தின் மூலம் தினம் தினம் பரிசு கிடைத்து வருவதுபோல இருக்கிறது. அந்த அளவிற்கு வாழ்த்துக்களும் கிடைத்து வருகிறது. குறிப்பாக ரஜினி சார் இன்று காலை எனக்கு கால் செய்து பேசினார்.
கால் செய்து படம் நன்றாக இருப்பதாக கேள்வி பட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வீட்டிற்கு சென்று படத்தை பார்க்க போகிறேன் என ரஜினி சார் என்னிடம் கூறினார். என் படத்தை பத்தி அவருக்கு தெரிஞ்சிருக்கு, அதை கேள்விபட்டு பார்க்க ஆசைபடுறாருன்னு சொல்லும்போது என்னுடைய வார்த்தைகளால் இதனை சொல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு எனக்கு சந்தோசமாக இருக்கிறது” என சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மேலும், “சித்தா” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.இந்த திரைப்படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், சஹஸ்ரா ஸ்ரீ, அஞ்சலி நாயர்உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025