இந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தான் முதலிடம்…..!!!
சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல மொழிகளில், பல படங்கள் வெளியாகிறது. இந்த படங்களில் நடிக்கின்ற அனைத்து நடிகர்களும் பிரபலமான நடிகர்கள் தான். ஆனால், இவர்கள் நடிக்கின்ற அனைத்து படங்களுமே சாதனை படைப்பதில்லை.
இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்ஸ், ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, எந்திரன், 2.0 மற்றும் கபாலி என நான்கு படங்கள் முதலிடம் பிடித்துள்ளது. இதனையடுத்து தளபதி விஜய் அவர்களின் சர்க்கார், மெர்சல் படங்கள் உள்ளது.