சூப்பர் ஸ்டார் ரஜினி.. தல அஜித்.! மேடையில் சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்.!

Ajith kumar - Vijay - Rajinikanth

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீசான திரைப்படம் லியோ. இப்படம் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இதுவரை வந்த விஜய் படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்து வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்பட வெற்றி விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு படத்தின் நாயகன் தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜூன், மிஸ்கின் என படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த விழாவில் திரண்டு வந்து இருந்தனர்.

பெரிதினும் பெரிது கேள்…விஜய் சொன்ன குட்டி கதை! அரங்கமே அதிர்ந்த தருணம்

தளபதி விஜயை நேரடியாக காண்பதற்கும், அவரது குட்டிக்கதையை கேட்பதற்கும், அரசியல் குறித்த தளபதி விஜயின் பதிலுக்கும் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் தனது பாணியில் மேடையில் பெரிதினும் பெரிது கேள் என்றபடி வேடன் எனும் குட்டி கதையை கூறி ரசிகர்களை கொண்டாடச் செய்தார் தளபதி விஜய்.

அடுத்ததாக ஒரே சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி மறைமுகமாக பேசிய விஜய் , ஒரே புரட்சி தலைவர் எம்ஜிஆர், ஒரே நடிகர் திலகம் சிவாஜி கனேசன், ஒரே உலகநாயகன் கமல்ஹாசன், ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரே தல அஜித் என தன்னை பற்றிய சூப்பர் ஸ்டார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தார் தளபதி விஜய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்