நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவருடைய 170 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் 170
நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக ரஜினி இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இவர் இதற்கு முன்னதாக ஜெய்பீம் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்குகிறார்.
ரஜினி நடிக்கவுள்ள அவருடைய 170-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக “தலைவர் 170” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்தில் நடிக்கும் பிரபலங்கள்
இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்புகளை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. இதுவரை பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா, உள்ளிட்ட படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது.
இணைந்த அமிதாப் பச்சன்
தலைவர் 170 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ரஜினியுடன் அமிதாப்பச்சன் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக 1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஹம்’ திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து 32-ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் அமிதாப்பச்சன் இந்த தலைவர் 170 திரைப்படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் ஒரே படத்தில் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…