மூடநம்பிக்கை இல்ல ஜெர்சியின் கலரை மாற்றுங்கள்!ஆத்திரம் அடைந்த நடிகை!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கேட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் நேற்று இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.இந்த போட்டியில் மட்டும் தான் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடியது.
அது பற்றிய கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த ஜெர்சியால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என பலரும் கமெண்ட் செய்து வரும் நிலையில்,பிரபல நடிகையான ஹுமா குரேஷி இந்த ஜெர்ச்சியை மாற்ற வேண்டும் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மூட நம்பிக்கை எதுவும் இல்லை.ஆனால் திரும்பவும் ப்ளூ ஜெர்சியை மாற்றுங்கள் என அவர் கூறியுள்ளார்.இவர் ரஜினியின் காதலியாக காலா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Not superstitious at all .. but can we please have the Blue jersey back .. enough said ????????♀️
— Huma Qureshi (@humasqureshi) June 30, 2019