லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான வேலையை தொடங்க திட்டமிட்டுள்ளார். அநேகமாக லோகேஷ் அடுத்தாக விஜய்யை வைத்து தான் படம் இயக்குவார் என நம்ப தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
எது, எப்படியோ இதற்கான விவிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும். இந்நிலையில், விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பல யூடியூப் சேனல்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பேட்டியளித்த வருகிறார்.
அப்போது. சமீபத்திய ஒரு பேட்டியில், செய்தியாளர் ஒருவர் ” உங்களிடம் இருந்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை எதிர்பார்க்கலாமா..? ” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ” கண்டிப்பாக ..ஏனென்றால், ஏற்கனவே ” இரும்பு கை மாயாவி” எனும் சூப்பர் ஹீரோ கதை எழுதிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த கதை லோகேஷ் கைதி படத்திற்கு முன்பே சூர்யாவுக்காக எழுதியிருந்தார். படம் மிகப்பெரியது என்பதால், பிறகு பார்த்து கொள்ளலாம் என்று லோகேஷ் சூர்யாவிடம் சொன்னதாகவும் பல பேட்டிகளில் லோகேஷ் தெரிவித்திருந்தார். விரைவில் இரும்பு கை மாயாவி படம் உருவாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…