சந்திரமுகி 2- ல் 10 பாடல்கள்! இசையமைப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமாகும்.
அப்போது, இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தற்போது, படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான ஸ்வகத்தாஞ்சலி படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன், வடிவேலு பேசிய டப்பிங் வீடியோ இணையத்தில் வைரலானது.
இப்பொது, படத்திற்கான இசைப்பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 9 பாடல்களை வெளியிடுவதில் ஆவலுடன் இருக்கிறோம் என இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
Last working day for Chandramukhi 2. It has been a memorable journey with
P Vasu Sir , @offl_Lawrence and @LycaProductions. Looking forward to releasing the remaining 9 songs !— mmkeeravaani (@mmkeeravaani) August 16, 2023