அந்த மாதிரி கதையில் கதாநாயகியாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் – ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது என்று கூறலாம். இன்னும் வரை அந்த பாடலை பலரும் கேட்டு ரசித்து வருகிறார்கள்.இந்நிலையில் , பாடகியாக கலக்கி வந்த ராஜலட்சுமி தற்போது நம்மளை நடிகையாக கவர வருகிறார்.
இதையும் படியுங்களேன்- இனிமேல் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன்..சிம்பு எடுத்த அதிரடி முடிவு.!?
ஆம், ராஜலட்சுமி பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார். லைசென்ஸ் என பெயரிட பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை கணபதி பாலமுருகன் இயக்குகிறார். படத்தில் ராதாரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் ராஜலட்சுமியுடன் அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. பாடகியாக நம் அனைவரையும் கவர்ந்த ராஜலட்சுமி நடிகையாக கவருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.