விக்ரமை விட பயங்கரமா இருக்கும்.! தளபதி67 பற்றி இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்.!
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் தற்போது விக்ரம் படத்திலும், விஜய் தனது 66 வது படத்திலும் பிஸியாக இருப்பதால், தளபதி 67 படத்திற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50% லோகேஷ் படமாகவும், 50% விஜய் படமாகவும் உருவானது. ஆனால், தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக எடுக்கப்படவுள்ளதாம்.
இந்த நிலையில். மாஸ்டர், விக்ரம் படங்களில் வசனம் எழுதிய இயக்குனர் ரத்ன குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் தளபதி 67 குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ரத்ன குமார் ” விக்ரம் படம் வெளியான பிறகு தளபதி 67 எந்த மாதிரி கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்க தொடங்கி விடுவார்கள்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சாரும், லோகேஷ் சார் இரண்டு பேரும் மறுபடியும் சேர்றாங்கனா அதுக்கு முக்கியமான காரணம் இருக்கும், கண்டிப்பாக தளபதி 67 விக்ரமை விட உக்கறமா இருக்கும்” என தெரிவித்துள்ளார்.