சூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் ரெடி !மீண்டும் அதே கூட்டணியில் உருவாகிறதா !
இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் மெகா ஹிட்டடித்த திரைப்படம் “கரகாட்டகாரன்”. இந்த படத்தில் நாயகனாக ராமராஜன் நடித்திருந்தார்.மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை கனகா நடித்திருந்தார்.
இந்த படம் ஒரு வருடங்களுக்கு மேல் ஓடியது.அதாவது இந்த படம் 425 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.இதையடுத்து இந்த படத்தில் கவுண்ட மணி மற்றும் செந்தில் கூட்டணியில் நகைச்சுவையில் அசத்தி இருப்பார்கள்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கை அமரன் முடிவெடுத்து விட்டாராம்.அதாவது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களை நடிக்க வைக்க போகிறார்களாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.