இந்த வாரம் வெளியாகும் 6 தமிழ் திரைப்படங்கள்.!
நாளை (செப்டம்பர் 20 ஆம் தேதி) ஒரேநாளில் 6 தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகவுள்ளன.
சென்னை : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை புது திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், நாளை (செப்டம்பர் 20 ஆம் தேதி) ஒரேநாளில் 6 தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகவுள்ளன.
அதன்படி, ஹரிஷ் கல்யாண் – அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’, ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’, சசிகுமாரின் ‘நந்தன்’, சத்யராஜின் ‘தோழர் சேகுவாரா’, சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’, ‘ தோனிமா’ ஆகிய 6 தமிழ் படங்கள் வெளியாகிறது.
லப்பர் பந்து
நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியயுள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் பார்வை காதல் மற்றும் சாதிய கோணங்களையும் கொண்டுள்ளது.
மேலும், படத்தில் நடிகை சஞ்சனா, பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி மற்றும் ஸ்வாசிகா விஜய் மற்றும் சிலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரின் கீழ், எஸ் லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கடைசி உலக போர்
கடைசி உலக போர் படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி, இப்படத்தை இயக்கிய ஆதி தனது ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் பேனரில் தயாரித்துள்ளார். ஒரு போர் உருவாகிறது அதனை ஹிப்ஹாப் ஆதி எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை.
மேலும், படத்தில் நட்டி, அனகா, என் அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், வினோத் ஜிடி, குகன் பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நந்தன்
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் “நந்தன்” படத்தை சசிகுமார் கடைசியாக ‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய ஈரா சரவணன் இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
படம் ஒரு அடக்கமான தொழிலாளி, தன்னை ஒடுக்குபவர்களுக்கு எதிராகப் போராட எழுச்சி பெறுவதில் உறுதியாக இருப்பது போன்ற உணர்ச்சிகரமான கதையை விவரிக்கிறது.
இப்படத்தில் சமுத்திரக்கனி, மாதேஷ், மிதுன், கட்டா எறும்பு ஸ்டாலின், வி ஞானவேல், ஜிஎம் குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தோழர் சேகுவேரா
நடிகர் சத்யராஜ் நடிக்கும் “தோழர் சேகுவேரா” படத்தை அலெக்ஸ் ஏடி இயக்கியுள்ளார். படத்தில், ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் மற்றும் அலெக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அரசியல் வாதிகளுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சண்டைகளின் கீழ், படத்தின் கதைக்களம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரே மேஜிக் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அனிஷ் எட்மண்ட் பிரபு இந்த படத்தை தயாரிக்க, பிஎஸ் அஷ்வின் இசையமைத்துள்ளார்.
கோழி பண்ணை செல்லத்துரை
யோகி பாபு மற்றும் ஏகன் நடித்திருக்கும் “கோழி பண்ணை செல்லத்துரை “படத்தை சீனு ராமசாமி எழுதி இயக்குகியுள்ளார். மேலும் படத்தில்,பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரிஜிடா சாகாவும் நடிக்கிறார்.
அரிதாரம் பூசாமல ஆபாசம் இல்லாமல் ஏழை மக்களின் பாச பிணைப்பை கருணை உள்ளத்தை அற்புதமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைக்க, விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கிறார்.
தோனிமா
குறும்பட நடிகர் காளி வெங்கட்டின் வரவிருக்கும் படமான “தோனிமா” படத்தில் காளி வெங்கட் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தில், தோனிமா என்பது கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டியின் பெயர்.
காளி வெங்கட், குடிகாரன் மற்றும் ஒரு கட்டிடத் தொழிலாளியாக நடிக்கிறார் ஜெகதீசன் சுபு இயக்கியுள்ள இப்படத்தை வெங்கடேஸ்வரன் தயாரிக்க, இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார்.