இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் வின்னர். இந்த திரைப்படத்தில் வடிவேலு, கிரண் ரத்தோட், ரியாஸ் கான், எம். என்.நம்பியார், நிரோஷா, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
காலங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நல்ல காமெடி படமாக இந்த படம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி படத்தை தான் காப்பி அடித்து எடுத்ததாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” வின்னர் படத்தை இயக்குவதற்கு முன்பு தயாரிப்பாளர் என்னிடம் ஒரு கேசட் கொடுத்து இதில் நிறைய தெலுங்கு படம் இருக்கிறது நீங்கள் இதனை பார்த்துவிட்டு எதாவது படம் பிடித்து இருந்தால் சொல்லுங்கள் நாம் ரீமேக் செய்யலாம் என்று கூறினார். நான் அந்த படங்களை பார்த்தவுடன் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டேன். ஏனென்றால், என்னுடைய படத்தை பார்த்து அப்படியே படத்தை எடுத்து வைத்து இருந்தார்கள்.
இதனால் எனக்கு ரொம்பவே கோபம் வந்துவிட்டது. என்னுடைய படத்தை காப்பி அடித்து எடுத்த அந்த இயக்குனர் மீது கோபம் வரவில்லை மொத்தமாகவே தெலுங்கு சினிமா மீதே கோபம் வந்துவிட்டது. என்னுடைய 3 படத்தை காப்பி அடிச்சு எடுத்து வைத்துவிட்டீர்களா? நான் உங்களை பழி வாங்குறேன் என்று தான் வின்னர் படத்தை எடுத்தேன்.
வின்னர் படத்தை தெலுங்கு படங்களை பார்த்து தான் காப்பி அடித்து எடுத்தேன். 4 படங்களை காப்பி அடித்து எழுதிய படம்தான் ‘வின்னர்’. ஹீரோவை ஹீரோயின் அடி வாங்க வைப்பது போல ஒரு படத்தில் இருந்த காட்சியை அப்படியே வைத்தால் சரியாக இருக்காது என்பதால் ‘இதோ வந்துட்டேன்’ என வடிவேலு குறுக்கே வந்து விழும் காட்சியை எடுத்தேன்.
நான் தெலுங்கில் இருந்து காப்பி அடித்ததை, அப்படியே காப்பி அடித்து வேறொரு தெலுங்கு படத்தில் வைத்துவிட்டார்கள். அப்போது என்னுடைய தோல்வியை நான் ஒப்புக்கொண்டேன். பழிவாங்குவதிலும் தோல்வி அடைந்துவிட்டேன்” எனவும் இயக்குனர் சுந்தர் சி கலகலப்பாக பேசியுள்ளார். மேலும் சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படம் வரும் மே 3- தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…