பிரசாந்தை ஐட்டம் பாயாக மாற்றிய சுந்தர் சி! வின்னர் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவமா?

sundar c

Winner : வின்னர் படத்தில் ஒரு பாடலுக்காக பிரசாந்தை ஐட்டம் பாயாக மாற்றிவிட்டேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் வரும் மே 3-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பேட்டி ஒன்றில் சுந்தர் சி நடிகர் பிரசாந்துடன் கலந்துகொண்டார்.

அந்த பேட்டியின் போது சுந்தர் சி பிரசாந்தை வைத்து இயக்கிய வின்னர் பட சமயத்தில் நடந்த கதையை பற்றியும் சுந்தர் சி பேசியுள்ளார். வின்னர் படத்தில் எந்தன் உயிர் தோழியே  என்ற பாடல் ஒன்று வரும். இந்த பாடலில் முழுக்க முழுக்க கிரண் மட்டும் இல்லாமல் பிரசாந்த் கூட சட்டை பட்டன் எல்லாம் கழட்டி கொண்டு சற்று கிளாமராக நடித்து இருப்பார்.

முதலில் இந்த பாடலை சுந்தர் சி இப்படி எடுக்கவே திட்டமிடவில்லையாம். முதலில் பாடலை யுவன் சங்கராஜாவிடம் பேசி வாங்கினாராம். யுவன் இந்த பாடலை கொடுக்கும்போதே படம் முடிவதற்கு முன்னாள் இப்படி ஒரு பாடலை வைத்தால் சரியாக இருக்காது என்பது போல கூறினாராம். அதற்கு சுந்தர் சி கரீபியன் இடத்தில் இந்த பாடலை எடுக்கப்போகிறோம் கண்டிப்பாக தியேட்டரில் ஒருவர் கூட எழுந்து போக மாட்டார்கள் என்று கூறினாராம்.

பிறகு படத்தின் தயாரிப்பாளர் வேறு ஆள் மாறி கரீபியனில் அந்த பாடல் எடுக்கமுடியாமல் போய் அதன்பிறகு கோவாவில் எடுக்கும் நிலைக்கு வந்ததாம். அதன் பிறகு கோவாவிலும் எடுக்க முடியாத சூழ்நிலை வந்த காரணத்தால் இறுதியாக சென்னை மகாபலிபுரம் கடற்கரையில் எடுக்கும் நிலை வந்ததாம். அந்த சமயம் சுந்தர் சி யுவன் சங்கர் ராஜாவிடம் சொன்ன தியேட்டரில் ஒருவர் கூட எழுந்து போக மாட்டார்கள் என்பது தான் அவருடைய நினைவுக்கு வந்ததாம்.

பிறகு இந்த பாடலை எப்படியாவது ஹிட் ஆக்கி கொடுக்கவேண்டும் என்று யோசித்து கிளமாறாக எடுக்க நினைத்தாராம் சுந்தர் சி. பிறகு பிரசாந்த்திடம் சென்று கிரண் மட்டும் கிளாமராக நடிக்கவேண்டாம்.நீங்களும் சட்டை பட்டனை கழட்டிவிட்டு சற்று கிளாமராக நடிங்கள் என்று கூறிவிட்டாராம். பாடல் நன்றாக வரவேண்டும் என்பதால் பிரசாந்தை ஐட்டம் பாயாக மாற்றிவிட்டேன் என சுந்தர் சி இந்த தகவலை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வின்னர் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவமா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்