நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை! கொதித்தெழுந்த பா.ரஞ்சித்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இயக்குனர் பா.ரஞ்சித் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், வளம் வருகிறார்.
நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளால், 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து பா.ரஞ்சித் அவர்கள் கூறுகையில், நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொது ரிதுஸ்ரீ, வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு, நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தான் இதை நிகழ்த்தியவர்கள்.’ என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!
— pa.ranjith (@beemji) June 6, 2019