இயக்குநர் சுதா கொங்கரா தான் வாங்கிய முதல் காரில், மணிரத்னம், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் உடன் ஜாலியாக ஒரு ரைடு சென்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் கடைசியாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா தான் வாங்கிய முதல் காரில், இயக்குனர் மணிரத்னம், நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் உடன் ஜாலியாக ஒரு ரைடு சென்று அதற்கான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ” எனக்குப் பிடித்த நபர்களுடன் எனது முதல் காருடன் பசுமையாகப் போவதில் மகிழ்ச்சி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள புகைப்படங்களும், அந்த பதவியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அடுத்ததாக சூர்யாவுடன் எப்போது படம்..? என கேள்விகேட்டு வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் நடிகையா இது..? கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
மேலும், இயக்குனர் சுதா கொங்கரா தற்போது நடிகர் அக்ஷய் குமாரை வைத்து சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…