திடீர் நெஞ்சுவலி…‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்…!
அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஜெர்மி ரெனர் நேற்று வீட்டுக்கு சென்றபோது, கடும் குளிர் காற்றுடன் ஏற்பட்ட பனிப்புயலால், அவரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜெர்மி ரென்னர் விமானம் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஆனாலும், அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவலின் படி, “மார்பு மற்றும் எலும்பியல் காயங்களால்” பாதிக்கப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருகிறார் எனவும், இன்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பார்த்த அவருடைய ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.