காலில் விழுந்ததால் தான் கமலுக்கு பிக்பாஸ் வாய்ப்பு! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா!

suchitra about kamalhasan

பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான சுசித்ரா சமீப நாட்களாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்தும் நிகழ்ச்சி குறித்தும் யூடியூப் சேனல்களில் விமர்சனம் செய்து பேசி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கூல் சுரேஷை பற்றி அவர் (cross-dresser) குறுக்கு அலங்காரம் செய்பவர் என்று கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” கமல்ஹாசன் ஒன்னும் பிக் பாஸ் வீட்டிற்கு ஓனர் இல்லை. அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஒரு தொகுப்பாளர் தான். அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கெடுக்கிறார்.

அவருக்கு பதிலாக வேறு தொகுப்பாளர் போட்டால் நிகழ்ச்சிக்கு நன்றாக ஓடும் அவருக்கு வயதாகி விட்டதால் இந்த நிகழ்ச்சியை நடத்தவே தெரியவில்லை. அவருக்கு பதிலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்புவை கொண்டு வந்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும். கமல்ஹாசனுக்கு எந்த அனுபவமும் இல்லை. அவர் அணிந்து வரும் உடை எல்லாம் பார்க்கும்போது ரொம்பவே காமெடியாக இருக்கும்.

அந்த மாதிரி ரோலில் நடிக்க காத்திருக்கும் ஷிவானி ராஜசேகர்! செம தில்லு தான் உங்களுக்கு!

இப்படியான உடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சியை அடிமட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.  அவர் ஒரு தாத்தா  வயதாகிவிட்டது” என கடுமையாக விமர்சித்து சுசித்ரா பேசியுள்ளார். இவர் பேசியதை பார்த்த கமல்ஹாசன் ரசிகர்கள் வயதில் எவ்வளவு பெரிய மனிதர் அவரை பற்றி இப்படியா பேசுவீங்க? உங்களுக்கு வேற வேலை இல்லையா? என திட்டி தீர்த்து வருகிறார்கள்.

மேலும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனியை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரத்தில் கமல்ஹாசன் அவருடைய தரப்பு நியாத்தை கேட்க்காமல் வெளியே அனுப்புவிட்டார் என்ற விமர்சனம் எழுந்தது. அதனை வைத்து தான் தற்போது சுசித்ரா கமல்ஹாசனை விமர்சித்து பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்