சென்னை : பயில்வான் ரங்கநாதன் அவமானம் பட்டு சாகவேண்டும் என பாடகி சுசித்ரா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி பேசுவது வழக்கமான ஒன்று. இவர் பேசியது சில பிரபலங்களுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்துவதால் பல பிரபலங்கள் அவரை தீட்டுவதும் உண்டு. அந்த வகையில், பிரபல பாடகியான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார்.
இது குறித்து பேசிய பாடகி சுசித்ரா ” நான் பல ஆண்டுகளாக சினிமா துறையில் பாடல்களை பாடி கொண்டு இருக்கிறேன். ஒரு முறை கூட பயில்வான் ரங்கநாதனை நேரில் சந்தித்தது கூட இல்லை. ஆனால், என்னை பற்றி அவர் தவறாக பல விஷயங்களை சொன்னார் நான் ஹோட்டல் ரூமில் இருந்தேன் என்று சொன்னார். இப்படி எல்லாம் இல்லாததை சொல்வது ரொம்பவே தவறாக இருக்கிறது.
எனக்கும் அவருக்கு தனிப்பட்ட முறை எந்த பிரச்சனையும் கூட இல்லை அப்படி இருக்கையில் என்னை பற்றி ஏன் ஆவர் இப்படி பேசினார் என்று புரியவில்லை. அவர் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும்ஏஜெண் வேலையை செய்து கொண்டு இருந்தவர். அப்போதெல்லாம் அந்த மாதிரி படங்கள் எல்லாம் அதிக அளவு கேரளாவில் மட்டுமே தான் இருந்தது. ஆனால், அந்த கலாச்சாரத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது பயில்வான் தான்.
அதன்பிறகு தான் படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு சினிமாவில் பிரபலங்களை பற்றி கிசு கிசுக்களை பேசினார். அவரை பற்றி பேசினாலே கோபம் தான் வருகிறது. அவர் சீக்கிரமே சாகவேண்டும். அவருடைய சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டு, நடுரோட்டில் கதறி அழுது தினம் சாகணும். நாசமா போ, செத்துப்போ, அப்போத்தான் அவரோட மகள் உருப்புடுவாங்க ” எனவும் மிகவும் காட்டத்துடன் சுசித்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…
கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்,…
சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்.. நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற…