தம்மாத்தூண்டு ரோலுக்கு அவ்வளவு பெரிய பில்டப்பு! லோகேஷை பங்கமாக கலாய்த்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan

நடிகர் மன்சூர் அலிகான் தனது மனதிற்கு தோணுவதை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜ் பற்றியும் லியோ படத்தில் நடித்தது பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய அவர் “லோகேஷ் கனகராஜ் என்னை வைத்து ஒரு அரசியல் படம் எடுக்கலாம் என்று நான் நிக்கிறேன்.

ஏனென்றால், ஒரு படத்தை எடுக்க 500 கோடி செலவு செய்து லட்சம் பேருக்கு வேலை கொடுத்து, 1 வருடம் பாடுபட்டு ரூ. 1000 கோடி வசூலுக்கு உழைக்கிறோம். ஆனால், அரசியல்வாதிகள் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு ரூ.10,000 கோடி, 20,000 கோடி ஆட்டய போடுகிறார்கள். எனவே இதை வைத்து தான் நான் சொல்கிறேன். லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்.

LeoBoxOffice: 500 கோடியை தாண்டிய ‘லியோ’! ஒரே வாரத்தில் மிரட்டல் சாதனை!

அதையெல்லாம் விட்டுவிட்டு ‘தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு’ என லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சூசகமாக பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான் “என்னை வைத்து அரசியல் படங்கள் எடுக்கவில்லை என்றால் வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம்.

லோகேஷ் கனகராஜ். 500 மிலிட்டரி டேங்கர், 500 போர் விமானம் எடுத்துக்கொண்டு வாருங்கள், போருக்கு போய், எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம். அப்பாவிங்க சாகுறாங்க சும்மா, டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில குடுத்துக்கிட்டு வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ் கனகராஜ்” எனவும் மன்சூர் அலிகான் பேசிருக்கிறார்.

மேலும், மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் இருதயராஜ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. கடந்த 19-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 500 கோடி வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror