அடேங்கப்பா! ‘இந்தியன் 2’ கிளைமாக்ஸ் காட்சியில் இவ்வளவு பெரிய சர்ப்ரைஸா?

indian 2

இந்தியன் 2 : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இந்தியன் 2 படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், வசூல் ரீதியாக படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் படம் உருவாகி இருப்பதால் கண்டிப்பாக படம் பிரமாண்டமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். ஏற்கனவே, முதல் பாகத்தில் கமல்ஹாசன் நடித்த சேனாதிபதி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்திலும் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது.

படம் வெளியான இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் சர்ப்ரைஸ் பற்றிய தகவல் கசிந்துள்ளது . அது என்னவென்றால், வழக்கமாகவே ஒரு படம் அடுத்த பாகத்திற்கு செல்கிறது என்றால் படம் முடியும் போது பாகம் விரைவில் என்று தான் வரும். ஆனால், இந்தியன் 2 படத்தில் அப்படி எந்த காட்சியும் வராதாம்.

அதற்கு பதிலாக மக்களை கவரும் வகையில் இந்தியன் 3 படத்திற்கான ப்ரோமோ ஒன்றை ரெடி செய்து சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2-வின் கடைசி காட்சியில் வைத்து இருக்கிறாராம். கண்டிப்பாக அந்த ப்ரோமோவும் படத்துடன் பார்க்கும்போது மூன்றாவது பாகத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துமாம்.

இது ஒரு ஒரு புறம் இருக்க மற்றோரு தகலும் இருக்கிறது. அது என்னவென்றால், இந்தியன் 2 படத்தின் இடைவெளி காட்சிக்கு பிறகு தான் கமல்ஹாசன் வருவாராம். அதுவரை மற்றவர்கள் கமல்ஹாசனுக்கு பில்டப் கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதெல்லாம் உண்மையா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும். எனவே, படத்தை பார்த்து தெரிந்துகொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்