சினிமா

தொடர்ச்சியாக ரஜினி படங்கள் பிளாப்! சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த கேப்டன் விஜயகாந்த்!

Published by
பால முருகன்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் எல்லாம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பெரிய அளவில் வெற்றியை பெற்று வந்த காரணத்தால் அவருக்கு ரசிகர்கள் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தனர். ஆனால், ஒரு காலகட்டத்தில் ரஜினி நடித்த படங்கள் தோல்வி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு பக்கம் விஜயகாந்த் நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது .

இதன் காரணமாக  அந்த சமயம் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்றான ஜெமினி சினிமா பத்திரிகை சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் என்ற தலைப்புடன் ஒரு கட்டுரையை வெளியீட்டு இருந்தது. அந்த கட்டுரையில் விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த கதை மற்றும்  செய்த உதவிகள் மாற்றும் எதற்காக அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதற்கான விவரத்தையும் கொடுத்திருந்தார்கள்.

முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த மிஸ்டர் பாரத், நான் அடிமை இல்லை, விடுதலை, மாவீரன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதே சமயம் விஜயகாந்த் கரிமேடு கருவாயன், நம்பினார் கெடுவதில்லை, சிகப்பு மலர்கள், வசந்த ராகம், எனக்கு நானே நீதிபதி, ஊமை விழிகள், சிம்ஹாசனம் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவியத்தொடங்கியது மட்டுமின்றி ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது. இதனால் விஜயகாந்த் படங்கள் வெளியானால் அந்த தியேட்டரே திருவிழா போல தான் இருக்குமாம். அந்த சமயம் எல்லாம் ரஜினி படங்களை மிஞ்சும் அளவிற்கு விஜயகாந்த் படங்களுக்கு ஓப்பனிங் கிடைத்ததாம்.

இதன் காரணமாக தான் அந்த ஜெமினி சினிமா பத்திரிகை  சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் என ஒரு கட்டுரையை வெளியீட்டு இருந்ததாம். அந்த சமயம் பத்திரிகையில் தன்னுடைய பெயர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வந்ததை பற்றி விஜயகாந்த்திடம் கேள்வியும் கேட்கப்பட்டதாம். அதற்கு விஜயகாந்த்  அந்த சமயமே கூறிய பதில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

அப்படி என்ன சொன்னார் என்றால் “எனக்கு சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்கள் மீதெல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. மக்கள் எனக்கு என்னை ஒரு நல்ல நடிகராக நினைத்து நடிகன் என்ற பட்டம் கொடுத்தாலே போதும். அதுவே எனக்கு மிகப்பெரிய பெருமையான விஷயம் தான்.  தொடர்ச்சியாக ஆக்சன் படங்களில் நடித்து வந்த எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய இந்த வெற்றிக்கு தமிழ் மக்கள் தான் காரணம்” எனவும்” விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

5 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

8 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

10 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

11 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

11 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

12 hours ago