நடிகை குஷ்பூ தனது உடல் எடையை குறைத்து இப்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகில் இருக்கிறார். இதனால் அவருக்கு இப்போதும் கூட பல பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. அவரும் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமான ஒரு திரைப்படம் விஜய் நடித்து வரும் “வாரிசு”.
அட ஆமாங்க… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பூவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏனெனில் நேற்று வாரிசு படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதில் ஒரு புகைப்படத்தில் விஜய்யுடன் நடிகை குஷ்பூவும் இருந்தார்.
இதன் மூலம் வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், முன்னதாக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் வாரிசு படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா..? என்ற கேள்வி கேட்டபோது குஷ்பூ ” வாரிசு படத்தின் அப்டேட்டை அவர்களிடம் கேளுங்கள்.
இதையும் படியுங்களேன்- மோசமான விமர்சனங்களை கடந்து 50 கோடி வசூலை நெருங்கும் “பிரின்ஸ்”.!
எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் வேறொரு படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது வாரிசு படப்பிடிப்பும் பக்கத்தில் நடைபெற்றது. அதனால் நான் சென்று விஜய்யை சந்தித்து பேசினேன்” என்று கூறிஇருந்தார். ஆனால், தற்போது வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படத்தின் மூலம் குஷ்பூ நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அதனை குறிப்பிட்டு குஷ்புவை நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…