வாரிசு விவகாரம்.! வம்படியாய் பேசி மாட்டிக்கொண்ட குஷ்பூ.! வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.!

Default Image

நடிகை குஷ்பூ தனது உடல் எடையை குறைத்து இப்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகில் இருக்கிறார். இதனால் அவருக்கு இப்போதும் கூட பல பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. அவரும் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமான ஒரு திரைப்படம் விஜய் நடித்து வரும் “வாரிசு”.

Khushboo Is Acting In Varisu Movie
Khushboo Is Acting In Varisu Movie [Image Source: Twitter ]

அட ஆமாங்க… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பூவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏனெனில் நேற்று வாரிசு படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதில் ஒரு புகைப்படத்தில் விஜய்யுடன் நடிகை குஷ்பூவும் இருந்தார்.

Khushboo Is Acting In Varisu Movie
Khushboo Is Acting In Varisu Movie [Image Source: Twitter ]

இதன் மூலம் வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், முன்னதாக ஒரு செய்தியாளர்கள்  சந்திப்பில் வாரிசு படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா..? என்ற கேள்வி கேட்டபோது குஷ்பூ ” வாரிசு படத்தின் அப்டேட்டை அவர்களிடம் கேளுங்கள்.

இதையும் படியுங்களேன்- மோசமான விமர்சனங்களை கடந்து 50 கோடி வசூலை நெருங்கும் “பிரின்ஸ்”.!

Vijay And Kushboo And Rashmika Mandanna
Vijay And Kushboo And Rashmika Mandanna [Image Source: Twitter/Cinebloopers]

எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் வேறொரு படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது வாரிசு படப்பிடிப்பும் பக்கத்தில் நடைபெற்றது. அதனால் நான் சென்று விஜய்யை சந்தித்து பேசினேன்” என்று கூறிஇருந்தார். ஆனால், தற்போது வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படத்தின் மூலம் குஷ்பூ நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அதனை குறிப்பிட்டு குஷ்புவை நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்