படப்பிடிப்பு தான் முக்கியமா? விசித்திராவுடன் வாக்கு வாதத்தில் குட்டி வனிதா…அனல் பறக்கும் ப்ரோமோ!

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சியில் இப்போது தான் சண்டைகள் நடைபெற தொடங்கி இருக்கிறது.  இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வத்தி குச்சி வனிதா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மகள் ஜோவிகா கலந்துகொண்டுள்ளார். வனிதாவிடம் யாராவது சண்டைக்கு சென்றாலே அவருடைய பேச்சுக்கு யாரும் எதிர்பேச்சு கூட பேச முடியாத அளவிற்கு சண்டைபோட்டு விடுவார்.

அவருடைய மகளும் அவருக்கு இணையாக பேச கூடியவராக தான் இருக்கிறார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்திராவுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். படப்பிப்பு விஷியத்திற்காக இந்த வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அவர்கள் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபடும் காட்சி இடம்பெற்று உள்ளது.

ப்ரோமோவில் ” விசித்ரா எழுத படிக்க தெரியவேண்டும். நீ தமிழ் எதாவது போய் எழுது பாப்போம் என்று கூறுகிறார். அதற்கு ஜோவிகா நான் தமிழ் படிக்கவே இல்லை என்று கூறிவிட்டு எனக்கு எழுத படிக்க வரவில்லை நான் அதனால் அதை செய்யவில்லை. இதன் காரணமாக தான் நான் படிக்கவே இல்லை. படித்தால் தான் வாழ முடியும் என்று ஒண்ணுமே இல்லை ” என்று மிகவும் காட்டத்துடன் பேசி சென்று போகிறார்.

இதைப்போலவே, மற்றோரு ப்ரோமோவில் ஜோவிகா நான் இங்கு வந்த ஒரே ஒரு காரணம் என்னவென்றால், படிப்பு என்கிற விஷயத்தால் சில குழந்தைகள் தவறான வழிக்கு செல்கிறார்கள். அவர்களை பற்றி பேசி சில விஷயங்களை புரிய வைக்கத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று பேசி இருந்தார்.

இந்த வயதில் இப்படி ஜோவிகா  கத்தி பேசியதை பார்த்த நிக்சன், ரவீனா, பவா செல்லதுரை ஆகியோர்  கைதட்டி அவர் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜோவிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில். படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல” என்று சொன்னதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர், விசித்ரா இதை பற்றி சொன்ன முறை வேண்டும் என்றால்  தவறாக இருந்திருக்கலாம் , ஆனால், படிப்பு முக்கியம் என்ற அவரின் அந்த கருத்தில்  எந்த தவறுமில்லை எனவும் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்