சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கல்லூரி ஒன்றிற்கு அபர்ணா பாலமுரளி படக்குழுவினருடன் சென்றிருந்தார். அப்போது ஒரு மாணவர் மேடையில் ஏறி தவறாக நடந்து கொண்டு அங்கிருப்பவர்களை முகம் சுளிக்க செய்துள்ளார்.
மேடையில் ஏறிய அந்த நபர் அபர்ணாவுக்கு பூ ஒன்றை கொண்டு வந்து கொடுக்க முயன்றார். பூவை கொடுத்துவிட்டு கை கொடுத்து புகைப்படம் எடுக்க அபர்ணாவை இழுத்தார். பிறகு தோளில் கையை போட முயன்றார். பிறகு அப்டியே அபர்ணா நழுவினார்.
இந்த சம்பவம் அபர்ணாவுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் கோபத்தை வெளியில் காமிக்காமல் சிரித்துக்கொண்டே விட்டுவிட்டார். மாணவன் செய்த இந்த அத்துமீறலான செயலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலர் முன்னிலையில் தவறாக நடந்து கொண்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…