தமிழ் திரையுலகிற்கு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், எனும் வித்தியாசமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இதில் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் அப்போது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்பொது ரீ-ரிலீஸ்செய்யப்பட்டால் கொண்டாடுகிறார்கள்.
இதனையடுத்து, ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்களுக்கு காத்துள்ளனர். இதில் ஆயிரத்தில் ஒருவன் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் அதில் தனுஷ் நடிப்பார் என செல்வராகவன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியாளத்த செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த செல்வராகவன் என்கிட்டே இருக்கு..தனுஷ் மற்றும் கார்த்தி வரவேண்டும்.. இரண்டு பேர் கிட்டயும் கதையை சொல்லிவிட்டேன.. நடக்கும் போது அதுவாகவே நடக்கும்” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எப்போது தான் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 வரும் என ஏக்கத்துடன் காத்துள்ளனர்.
மேலும் இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து இவரது நடிப்பில் சாணி காயிதம் வரும் மே 6-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…