எனக்கு கதை தான் முக்கியம்! சம்பளம்லா முக்கியம் இல்லை!
நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், தமன்னாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்ரோமாக்ஸ்’திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், தமன்னா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டங்கள் தெரிவித்துள்ளது.
அது என்னவென்றால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடிக்க போவதில்லை என்றும், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பிடித்திருந்தால் சம்பளத்தை குறைப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.